168 படங்களில் பார்க்காத ரஜினியை பார்ப்பீர்கள்.. 'ஜெயிலர்' பட நடிகர் பேட்டி..!

  • IndiaGlitz, [Tuesday,April 18 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’ . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக பட குழுவினர்களிடமிருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் வசந்த் ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படம் குறித்த சில தகவல்களை தெரிவித்துள்ளார். ‘ஜெயிலர்’ திரைப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும், இதுவரை அவர் நடித்த 168 திரைப்படங்களில் காணாத வித்தியாசமான ஒரு ரஜினியை ரசிகர்கள் பார்ப்பார்கள்’ என்று தெரிவித்தார்.

மேலும் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்றும் இந்த படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கேரக்டர் என்றும் இந்த படம் என் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டியால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மோகன்லால் உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.