close
Choose your channels

'தலைவரு அலப்பறை': 'ஜெயிலர்' செகண்ட் சிங்கிள் ரிலீஸ்..!

Monday, July 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற Hukum என்ற பாடல் என்றும் மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பஞ்ச் வசனத்துடன் தொடங்கும் இந்த பாடல் ரஜினி ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது போல் ஸ்டைலிஷ் ஆக உள்ளது என்பதும் ரஜினியின் பெருமைகளை கூறும் வகையில் பாடல் வரிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் கம்போஸ் செய்து பாடியுள்ள இந்த பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார். ’தலைவர் அலப்பறை’ என்ற இந்த பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘காவாலா’ இன்னும் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது பாடலும் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment