'ஜெயிலர்' ஓடிடி ரிலீஸ் எப்போது? அமேசான் ப்ரைம் அதிரடி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,September 02 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் ’ஜெயிலர்’.

இந்த படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும், உலகம் முழுவதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்தது. மேலும் இந்த படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே 525 கோடி ரூபாய் வசூல் ஆனதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது ரூ.600 கோடியை நெருங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வசூல் சாதனை செய்த இந்த படம் ஓடிடியிலும் மிகப்பெரிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ’ஜெயிலர்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு அமேசான் ப்ரைமுக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் படம் தயாரிக்கும் ஜிவி பிரகாஷ்.. இதுதான் டைட்டில்..!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான 'மதயானை கூட்டம்' என்ற திரைப்படத்தை தயாரித்தார். 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த

'சலார்' தள்ளி போனதால் ரிலீஸ் ஆகும் ஹரிஷ் கல்யாண் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பிரபாஸ் நடித்த 'சலார்' திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் FDFS படம் பார்த்த விஜய்.. ஃபேன் பேயாக மாறி செய்த அலப்பறை..!

தளபதி விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து திரையில் விஜய் தோன்றும் போது அலப்பறை செய்வார்கள். அதேபோல் தற்போது அமெரிக்காவில் உள்ள

நடிகர் மாதவனுக்கு மத்திய அரசு கொடுத்த சிறப்பு பதவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகர் மாதவன் நடித்து, இயக்கி, தயாரித்த 'ராக்கெட்டரி' என்ற திரைப்படத்திற்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்த நிலையில் தற்போது மத்திய அரசு அவருக்கு சிறப்பு பதவியை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியை அடுத்து நெல்சனுக்கு டபுள் சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்.. வேற லெவல் வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான  'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.