'ஜெயிலர்' ஓடிடி ரிலீஸ் எப்போது? அமேசான் ப்ரைம் அதிரடி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,September 02 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் ’ஜெயிலர்’.

இந்த படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும், உலகம் முழுவதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்தது. மேலும் இந்த படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே 525 கோடி ரூபாய் வசூல் ஆனதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது ரூ.600 கோடியை நெருங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வசூல் சாதனை செய்த இந்த படம் ஓடிடியிலும் மிகப்பெரிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ’ஜெயிலர்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு அமேசான் ப்ரைமுக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.