ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்.. 'ஜெயிலர்' படத்தின் முக்கிய அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,July 25 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் இடம்பெற்ற ’காவலா’ என்ற பாடல் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி சூப்பர்ஹிட் ஆகியது என்பதும் அதேபோல் ‘ஹூக்கும்’ என்ற பாடல் இரண்டாவது சிங்கிள் பாடலாகவும் வெளியானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்ற மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ஜூஜுபி என்ற பாடல் நாளை அதாவது ஜூலை 26 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தீ பாடியுள்ளார் என்றும், இந்த பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.