close
Choose your channels

தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் முன்பே அண்டை மாநிலத்தில் ரிலீஸ் ஆகும் 'ஜெயிலர்' திரைப்படம்..!

Tuesday, August 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி ‘ஜெயிலர்’ படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என்றும் முதல் காட்சி அனைத்து திரையரங்குகளிலும் காலை 9:00 மணிக்கு தான் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே எந்த படத்திற்கும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்தில் அதிகாலை 6:00 மணிக்கு ‘ஜெயிலர்’ முதல் காட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. எனவே தமிழகத்தில் முதல் காட்சி தொடங்க முன்னரே கர்நாடகத்தில் ஒரு காட்சி முடிவடைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ ரிலீஸாக இன்னும் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும் நிலையில் அதற்குள் தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment