'யாரெல்லாம்' இந்த காம்போ பாக்க வெயிட்டிங்.. 'ஜெயிலர்' படத்தின் மோகன்லால் ஸ்டில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்னும் ஐந்து நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் நடித்த கேரக்டர்களின் போஸ்டர்கள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ரஜினியுடன் மோகன்லால் இருக்கும் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இதில் கேப்ஷனாக ’யாரெல்லாம் இந்த காம்போ பார்க்க வெயிட்டிங்’ என்றும் பதிவு செய்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இன்னொரு பக்கம் தமன்னாவின் 'காவாலா’ பாடல் நூறு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்துள்ளது. ரஜினியின் மிக அதிக வசூல் பெற்ற, மிகப்பெரிய வெற்றி படமாக ‘ஜெயிலர்’ இருக்கும் என்று கோலிவுட் திரையுலகினர் கணித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
Superstar - Lalettan 😍
— Sun Pictures (@sunpictures) August 5, 2023
Yarellam indha combo paaka waiting? 5 days to go for #Jailer storm in theatres! #JailerFromAug10 @rajinikanth @Mohanlal @Nelsondilpkumar @anirudhofficial @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/nuDxhjv8qP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com