டீசருக்கே ஒரு டீசரா? 'ஜெயிலர்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்..!
- IndiaGlitz, [Saturday,July 22 2023]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
ரஜினியின் முந்தைய படமான ’அண்ணாத்த’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் அதிருப்தியில் இருக்கும் ரஜினி ரசிகர்களை குளிர்விக்கும் வகையில் இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் இசை வெளியீட்டு விழா குறித்த மாஸ் வீடியோவை வெளியிட்டு இசை வெளியீட்டு விழாவை காண தயாராகுங்கள்’ என அறிவித்துள்ளது. இதனை அடுத்து ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர்’ இசை விழாவில் ரஜினிகாந்த், தமன்னா, நெல்சன், அனிருத், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரது பேச்சைக் கேட்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
Get ready…🔥💥🥳@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @AlwaysJani @StunShiva8 @RIAZtheboss #Jailer pic.twitter.com/uRkjbMsTSI
— Sun Pictures (@sunpictures) July 21, 2023