'ஜெயிலர்' FDFS காட்சியில் ரஜினியின் மனைவி, மகள்.. குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் இன்று காலை 6 மணிக்கு தமிழகம் தவிர அனைத்து பகுதிகளிலும் முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் தமிழகத்தில் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.
தமிழகத்தில் முதல் காட்சி முடிவடைந்து தற்போது படம் பார்த்தவர்கள் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலான விமர்சனங்கள் பாசிட்டிவாக உள்ளது.
குறிப்பாக முதல் பாதியில் நெல்சனின் பிளாக் காமெடி, ரஜினி - யோகி பாபுவின் காமெடி என ஜாலியாக செல்வதாகவும் இடைவேளையின்போது பயங்கரமான ட்விஸ்ட்டுடன் முடிவடைந்து அதன் பின் இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க விறுவிறுப்பாகவும் அதிரடி ஆக்சன் காட்சிகளாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிக்கு ’பாட்ஷா’ போன்ற ஒரு மாஸ் படம் உருவாகி இருப்பதாகவும் நெல்சன் தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டதாகவும் படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரஜினிகாந்த் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் திரையரங்குக்கு வந்திருந்தனர். அதேபோல் தனுஷ் சென்னை ரோகினி திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார். அது மட்டும் இன்றி பல திரையுலக பிரபலங்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout