ஜெயிலர் இயக்குநர் நெல்சன்க்கு பிறந்தநாள்… வைரலாகும் குடும்ப புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,June 21 2023]

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக வரவேற்பை பெற்றிருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இன்று தனது 39 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிவரும் நிலையில் அவருடைய மனைவி இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்திருக்கும் பதிவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கி வந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தை இயக்கினார். காமெடி கலந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளைப் பெற்றார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்கி இருந்தார். தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே இந்தப் படத்தின் விற்பனை தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் இயக்குநர் நெல்சனுக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குநர் நெல்சன் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கடந்த 1984 ஜுன் 21 இல் வேலூரில் பிறந்த நெல்சனுக்கு மோனிஷா என்ற மனைவியும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நெல்சனின் மனைவி மோனிஷா தனது இன்ஸ்டா பதிவில் ‘ஹேப்பி பர்த்டே நெல்சன், இந்த வருடம் அற்புதமான வருடமாக அமையட்டும்‘ என வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து இயக்குநர் நெல்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறிவரும் அவரது ரசிகர்கள் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெற்றியடையவும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.