தொடங்கியது 'ஜெயிலர்' படத்தின் பிசினஸ்.. வெளிநாட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் பிசினஸ் தொடங்கி விட்டதாகவும் முதல் கட்டமாக வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் வெளிநாட்டு புரமோஷன் பணிகளை தொடங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதேபோல் இந்த படத்தின் தமிழகம் உள்ளிட்ட மற்ற பகுதிகளின் ரிலீஸ் உரிமைகளின் பிசினஸ் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
We are super excited to associate once again with @sunpictures for the Super 🌟's #Jailer 🔥
— Ayngaran International (@Ayngaran_offl) June 20, 2023
Overseas release by @Ayngaran_offl #JailerFromAugust10@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan pic.twitter.com/y29Vnak2pi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout