சென்னையில் பிரமாண்டமாக நடைபெறும் 'ஜெயிலர்' இசை வெளியீடு.. யார் யாரெல்லாம் வர்றாங்க..!

  • IndiaGlitz, [Wednesday,May 17 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் திசையில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் ரஜினிகாந்த் இந்த படத்திற்கான டப்பிங் பணியை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் ஜூலை மாதம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் இதில் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், மோகன் லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மோகன்லால் உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.