close
Choose your channels

'ஜெயிலர்' மருமகளா இவர்? வித்தியாசமான காஸ்ட்யூமில் போட்டோஷூட்..!

Monday, September 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ரூ.600 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர்கள் கூட பிரபலமாகி விட்டார்கள் என்பதும் அவர்களுக்கும் தற்போது அதிக வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் மிர்னா மேனன். இவர் ஏற்கனவே அதிதி மேனன் என்ற பெயரில் தமிழில் ’பட்டதாரி’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். இதன் பின்னர் அவர் மிர்னா மேனன் என்று பெயரை மாற்றிக் கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷின் 'புர்கா’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் தான் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் மருமகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவர் குறைந்த காட்சிகளே வந்தாலும் நடிப்பில் அசத்தி இருப்பார். இந்த நிலையில் தற்போது இவருக்கு ஓரிரு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் மிர்னா மேனன் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் சற்றுமுன் சேலை காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் சேலை அணிந்து இருந்தாலும் அவருடைய ஜாக்கெட் டிசைன் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு சுமார் 2 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment