'தளபதி 68' படத்தில் இணைகிறாரா 'ஜெயிலர்' நடிகை? எகிற வைக்கும் எதிர்பார்ப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,December 27 2023]

தளபதி விஜய் நடித்து வரும் 68 வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் அதாவது இலங்கையில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டமே இருக்கும் நிலையில் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்த நடிகையும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் ’தளபதி 68’ படத்தில் இணைந்து இருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தை சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மாளவிகா சர்மா ஆகிய நடிகைகள் இணைந்துள்ள நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் இணைந்ததால் இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் ஒரு வருடம் 19 வயது கெட்டப்பில் இருக்கும் வேடம் என்றும் இதற்காக புதிய டெக்னாலஜியை இயக்குனர் வெங்கட் பிரபு பயன்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.