ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் கலக்கிய மாஸ் நடிகர்.. கமல் அடுத்த படத்தில் இணைகிறாரா?

  • IndiaGlitz, [Sunday,November 05 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் கலக்கிய மாஸ் நடிகர் தற்போது கமல்ஹாசன் அடுத்த படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகிய மூன்று பிரபல நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர் என்பதும் இந்த மூன்று நடிகர்களும் வரும் காட்சிகள் மாஸாக இருந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இவர்களில் ஒருவரான சிவராஜ்குமார் அடுத்ததாக கமல்ஹாசனின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கமல்ஹாசன் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல் 233’ படத்தில் சிவராஜ் குமார் ஒரு முக்கிய இடத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தனுஷ் நடித்த ’கேப்டன் வில்லர்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சிவராஜ்குமார் நடித்திருக்கும் நிலையில் அடுத்தடுத்து அவர் தமிழ் படங்களில் நடிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் இதை செய்ய வேண்டும்: இயக்குனர் வெற்றிமாறன்

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் இதை செய்ய வேண்டும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.  

'மார்வெல்' படத்தில் விஜய்யுடன் இவர்கள் 2 பேரும் நடிக்கலாம்: சமந்தா

 'மார்வெல்' படத்தில் உள்ள கேரக்டர்களுக்கு இந்திய நடிகர்கள் யார் யார் பொருத்தமாக இருப்பார் என்ற கேள்விக்கு விஜய்யுடன் இரண்டு பிரபலங்களை நடிக்கலாம் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.  

அரைகுறை ஆடையுடன் ஆடுவது தான் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியா? தமிழ் நடிகர் ஆவேசம்..!

கடந்த சில மாதங்களாக ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி சென்னை உள்பட பல பெரு நகரங்களில் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் பல இளைஞர்கள் சாலையில் நின்று கொண்டாட்டத்தில்

எல்லாரையும் பேட்டி கொடுத்து கேவலமா பேசுவான்: பிரதீப் குறித்து பூர்ணிமா குரூப்..!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப்பை அனைவரும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிவிட்ட நிலையில் பிரதிப் போன சந்தோஷத்தை  பூர்ணிமா, மாயா உள்பட பெண்கள் குரூப் கொண்டாடி வருகிறது.

அண்டை மாநிலத்தில் அதிக வசூல் செய்த 'லியோ': அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் இந்த