அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைகிறாரா 'ஜெயிலர்' நடிகர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் நாயகி தேர்வு நடைபெற்று வருவதாகவும் சில முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய கேரக்டரில் நடிக்க ’ஜெயிலர்’ படத்தில் நடித்த சுனில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தெலுங்கு நடிகரான சுனில் ’ஜெயிலர்’ ’ஜப்பான்’ உட்பட சில தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்கான செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அனேகமாக ஜூன் இரண்டாவது வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அடுத்து ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout