நான் நடித்த படத்தின் புரமோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்: 'ஜெயிலர்' நடிகரின் வருத்தமான பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நான் நடித்த படத்தின் புரமோ வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்றும் குறைந்தபட்சம் எங்களிடம் ஒரு தகவலாவது தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கலாம் என்றும் மிகவும் வருத்தத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ படத்தில் நடித்த நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் அவருடைய மகன் கேரக்டரில் நடித்தவர் நடிகர் வசந்த் ரவி. இவர் ஒரு சில படங்களில் தற்போது ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இவர் நடித்த படங்களில் ஒன்று ’பொன் ஒன்று கண்டேன்’. அசோக்செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த இந்த படத்தை இயக்குனர் பிரியா இயக்கி உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே ’கண்ட நாள் முதல்’ உள்பட ஒரு சில படங்களை இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’பொன் ஒன்று கண்டேன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக இருப்பதாக புரமோ வீடியோ வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம், ஆனால் இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பது குறித்த புரமோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.
ஒரு படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டுமா அல்லது டிவியில் ரிலீஸ் செய்ய வேண்டுமா என்பது முழுக்க முழுக்க ஒரு தயாரிப்பாளரின் உரிமை என்றாலும் இந்த படத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்த எங்களிடம் மரியாதைக்காக ஒரு வார்த்தை கூறியிருக்கலாம். எங்கள் படம் தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆகிறது என்பதை நாங்களே ஆன்லைனில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது’ என்று வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.
#MassUpdate
— Colors Tamil (@ColorsTvTamil) March 14, 2024
உங்கள் #ColorsTamil சின்னத் திரையில்📺 #AshokSelvan ✨ #AishwaryaLekshmi 😍 #VasanthRavi 😃 நடித்த Triangle Love Story 💘 #PonOndruKanden 💘(#WTP) விரைவில் 📺 🥳 #POKonColorsTamil #ColorsTamilPromo #ColorsTamilWTP #OnlyonColorsTamil pic.twitter.com/Swhexr6OVz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com