ராகவா லாரன்ஸ் சகோதரர் நடிக்கும் 'புல்லட்' படத்தில் 'ஜெயிலர்'' நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,August 14 2023]

நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நாயகனாக நடிக்கும் படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு ‘புல்லட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ’டைரி’ இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் வைஷாலி ராஜ் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதும், சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவும் வடிவேல் விமல்ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்த சுனில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து படத்தை கலகலப்பான பாதைக்கு கொண்டு சென்ற சுனில் இந்த படத்தில் இணைத்துள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தொடர் விடுமுறையை குறி வைத்த 'இறைவன்'.. ரூ.250 கோடி பட்ஜெட் படத்துடன் மோதுகிறதா?

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த 'இறைவன்' திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப  பணிகள் தாமதம் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போக

கானாவில் கலக்கிய சிறுவன்.. திரைப்பட வாய்ப்பு தந்த தமன்!! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு ஆச்சரியம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும்  தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி சீசன் 9 கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது

கீர்த்தி சுரேஷூக்கு கேக் ஊட்டிவிட்ட ராதிகா சரத்குமார்.. என்ன விசேஷம்..!

நடிகை ராதிகா திரையுலகில் நடிக்க வந்து 45 ஆண்டுகள் ஆனதை அடுத்து இதற்கான விழா சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அந்த விழாவில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானதை அடுத்து நடிகர் ராதிகா, கீர்த்தி

அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழா.. தமிழ் நடிகைக்கு அழைப்பு..!

நாடு முழுவதும் சுதந்திர தினம் நாளை மறுநாள் சிறப்பாக கொண்டாட இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழ் நடிகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இசை நிகழ்ச்சி ரத்து.. ஏஆர் ரஹ்மான் ஆதங்கம்.. உடனடியாக பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்..!

நேற்று சென்னை பனையூரில் இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் கனமழை காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.