முன்னாள் முதல்வர் குறித்து சர்ச்சை பதிவு.. கைதாகிறாரா 'ஜெயிலர்' பட நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர், முன்னாள் முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு செய்ததை அடுத்து அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி காலமானார் என்பதும் அவருடைய மறைவிற்காக கேரளா அரசு 3 நாள் துக்கம் அனுசரித்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் மூன்று நாள் துக்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்த நடிகர் விநாயகன் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் ’உம்மன்சண்டி யார்? எதுக்கு மூன்று நாள் அரசு துக்கம் விசாரிக்கணும்? ஊடகங்கள் அவரது இறுதி ஊர்வலத்துக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறது? அவர் நல்லவர் என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன பண்ண முடியும்? என பதிவு செய்துள்ளார்.
பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டுள்ள நடிகர் விநாயகன் மீது காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளதாகவும் விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என்று கேரள காங்கிரஸ் கட்சியினர் கூறி வரும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com