14 ஆண்டுகள் சிறை.. விடுதலையாகி, எம்.பி.பி.எஸ் படித்து டாக்டரான இளைஞர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
14 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் வெளியே வந்து, மீண்டும் தேர்வெழுதி இளைஞர் ஒருவர் எம்.பி.பி.எஸ். டாக்டராகியுள்ளார்.விடா முயற்சியும், ஆர்வமும், உழைப்பும் இருந்தால் முடியாதது ஒன்றும் இல்லை என்பார்கள். அதற்கு நடைமுறையில் எத்தனையோபேர் உதாரணமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டம் அப்சல்புராவை சேர்ந்த சுபாஷ் பாட்டீல் என்ற இளைஞரும் ஒருவர்.
சுபாஷ் கடந்த 1997-ல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அப்போது கொலை வழக்கு ஒன்றில் தொடர்புபடுத்தப்பட்ட அவர் கடந்த 2002-ல் சிறைக்குச் சென்றார். அந்த சமயத்தின்போது சுபாஷ் 3 ஆண்டுகள் படிப்பை மட்டுமே முடித்திருந்தார்.
சிறையில் அவருக்கு மருத்துவ தொழில் சார்ந்த வேலையே அளிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு கொலை வழக்கில் சுபாஷுக்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் விதித்தது.
மிகச் சரியாக 14 ஆண்டுகள் அவர் சிறையில் கழித்த நிலையில், நன்னடத்தை கருதி 2016-ல் விடுவிக்கப்பட்டார். இதன்பின்னர் தொடர்ந்து படித்து, தேர்வுகளை எழுதிய சுபாஷ் 2019-ல் எம்.பி.பி.எஸ். மருத்துவ பட்டப்படிப்பை முடித்தார்.
சிறு வயது முதலே அவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அந்த லட்சித்தை சிறைக் கம்பிகளால் தகர்க்க முடியவில்லை. தற்போது தனது இலக்கை அடைந்து விட்டதாக சுபாஷ் பாட்டீல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout