கடும் கண்டனங்கள் எதிரொலி: 'ஜெய்பீம்' படத்தில் மாற்றப்பட்ட காட்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் வாதிகளும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஒரு சில அமைப்புகள் இந்த படத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். குறிப்பாக இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருந்தவர் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர் போல் காண்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அது கண்டனத்துக்கு உரியது என்றும் படக்குழுவினர் இந்த காட்சியை மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனை அடுத்து ‘ஜெய்பீம்’ படக்குழு தற்போது அந்த காட்சியை மாற்றி உள்ளதாக தெரிகிறது. இன்ஸ்பெக்டர் போனில் பேசும்போது பின்னணியில் ‘அக்னி கலசம்’ காலண்டர் இருந்த நிலையில் தற்போது லட்சுமி படம் போட்ட காலண்டர் ஆக மாற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
'ஜெய்பீம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அக்னி கலசம்’ காலண்டர் மாற்றம், அதற்கு பதிலாக லக்ஷ்மி படம் வரைந்த காலெண்டர் படத்தில் இடம்பெற்றுள்ளது.
— Raja Shanmugasundaram (@SRajaJourno) November 6, 2021
வன்னியர்கள், இயக்குநர் கவுதமன், வன்னியர் சங்கம் கண்டனம் உள்ளிட்டோர் தெரிவித்த நிலையில் மாற்றம்#Jaibhim #vanniyarsangam pic.twitter.com/dc3zr3g2u1
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com