'ஜெய்பீம்' படத்தில் போலீஸாக நடித்தவர் இவரா? ஆச்சரிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ படத்தில் போலீசாக நடித்த தமிழ் என்ற நடிகர் உண்மையாகவே போலீஸ் என்பதும் அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு திரையுலகிற்கு வந்து உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது
’ஜெய்பீம்’ படத்தில் கொடூர போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் தமிழ். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு இயக்குநரும் என்பது குறிப்பிடத்தக்கது
இவர் ஏற்கனவே போலீஸ் வேலையில் இருந்து சினிமா ஆசையின் காரணமாக வேலையை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்துள்ளார். அதுமட்டுமின்றி போலீஸ் ட்ரெய்னிங்கில் என்னென்ன கொடுமைகள் நடக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவர் ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும், விக்ரம்பிரபு நடித்த இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’ஜெய்பீம்’ படத்தில் போலீஸ் கேரக்டருக்கு தமிழ் பொருத்தமாக இருப்பார் என்பதால் இயக்குனர் ஞானசேகர் அவரை இந்த கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டாணாக்காரன்’ படம் வெளிவரும் முன்னரே அவர் தற்போது திரையுலகில் பிரபலம் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com