இரண்டு தாதா சாகேப் பால்கே விருதுகளை வென்ற 'ஜெய்பீம்': குவியும் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு இரண்டு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளதாக சற்றுமுன் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் உருவான திரைப்படம் ’ஜெய்பீம்’ . இந்த திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமேசான் ஓடிடியில் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு சில சர்ச்சைகள் எழுந்தபோதிலும் பொதுமக்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தாதாசாகேப் பால்கே விருது வழங்கும் விழாவில் ’ஜெய்பீம்’ படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளது. ’ஜெய்பீம்’ படத்திற்கு சிறந்த படம் விருதும், துணை நடிகர் விருதும் கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகர் விருது இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த மணிகண்டன் பெற்றுளார். ’ஜெய்பீம்’ படத்திற்கு இரு விருதுகள் கிடைத்துள்ளதை அடுத்து படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
#JaiBhim wins the Best Film & Best Supporting Actor awards at the #DadaSahebPhalkeFilmFestival
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 3, 2022
Thank you @dadasahebfest for the honour!
Congratulations #Manikandan on winning the Best Supporting actor
➡️https://t.co/8pwZaoeO17@Suriya_offl #Jyotika @tjgnan @rajsekarpandian
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments