'அசுரன்' 'ஜெய்பீம்' நடிகர் இயக்கும் படத்தில் கார்த்தி.. 60களின் கேங்ஸ்டார் படமா?

  • IndiaGlitz, [Sunday,March 03 2024]

’அசுரன்’ ‘ஜெய்பீம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவரும் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்தவரும், ‘டாணாக்காரன்’ என்ற படத்தை இயக்கிவருமான தமிழ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மற்றும் இயக்குனர் தமிழ், காவல் துறையில் பணிபுரிந்து அதன் பின்னர் சினிமா ஆசையால் காவல்துறை பணியை ராஜினாமா செய்து விட்டு இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றினார். ’அசுரன்’ ‘ஜெய்பீம்’ போன்ற படங்களில் சில கேரக்டர்களில் நடித்த தமிழ், கடந்த ஆண்டு விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற படத்தை இயக்கினார். நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த படம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘டாணாக்காரன்’ வெற்றியை அடுத்து தற்போது அவர் அடுத்த படத்தை இயக்குவதற்கான பணியை தொடங்கி உள்ளார் என்றும் அவரது அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் 60கள் காலகட்டத்தில் நடந்த கேங்ஸ்டர் படம் என்றும் ராமேஸ்வரம் தான் இந்த படத்தின் கதைக்களம் என்றும் கூறப்படுகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை முடிந்தவுடன் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

டைம் கிடைச்சா 'மஞ்சும்மள் பாய்ஸ்' படத்தை பாருங்க.. 'சிறகடிக்க ஆசை' நடிகர் பரிந்துரை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் நடித்து வரும் நடிகர் 'டைம் கிடைத்தால் எல்லோரும் மலையாள படமான 'மஞ்சும்மள் பாய்ஸ்'  படத்தை பாருங்கள்' என்று தனது சமூக வலைதளத்தில் வீடியோ

டைம் கிடைச்சா 'மஞ்சும்மள் பாய்ஸ்' படத்தை பாருங்க.. 'சிறகடிக்க ஆசை' நடிகர் பரிந்துரை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் நடித்து வரும் நடிகர் 'டைம் கிடைத்தால் எல்லோரும் மலையாள படமான 'மஞ்சும்மள் பாய்ஸ்'  படத்தை பாருங்கள்' என்று தனது சமூக வலைதளத்தில் வீடியோ

வெங்கடேஷ் பட், தாமுவை அடுத்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு இன்னொரு பின்னடைவு.. அடுத்த சீசன் வருமா?

விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருந்தனர்

திருநங்கை தனபாக்கியம் அவர்களின் வலி நிறைந்த வாழ்க்கை பயணம்.

சமுதாயத்தில் நாங்கள் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மற்றவர்கள் எங்களை பார்க்கும் விதத்தை பார்த்து எத்தனையோ முறை அழுது இருக்கிறேன்......................

அதிமுகவில் சேர்ந்த சில நாட்களில் பதவி பெற்ற தமிழ் நடிகை.. ஈபிஎஸ்-க்கு நன்றி..!

தமிழ் திரைப்பட நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்த நிலையில் தற்போது அவருக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.