'ஜெய்பீம்' நடிகை செங்கனியின் செம திருமண புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படத்தில் பழங்குடியின பெண் கேரக்டரில் நடித்த நடிகை லிஜோமோல் திருமண புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம் ’ஜெய்பீம்’ என்பதும் குறிப்பாக இந்த படத்தில் சூர்யாவின் நடிப்புக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’ஜெய்பீம்’ படத்தில் பழங்குடியின் பெண்ணாக நடித்த பிரபல மலையாள நடிகை லிஜோமோல், அருண் ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி இவர்களது திருமணம் கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் நடந்தது. இந்த திருமணத்திற்கு சூர்யா, ஜோதிகா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை லிஜோமோல் தற்போது ’அன்னபூரணி’ ’காதல் என்பது பொதுவுடமை’ ஆகிய தமிழ் படங்கள் உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout