'சென்னை 600028 II'ரிலீஸ் தேதி. வெங்கட்பிரபு அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,October 27 2016]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகமான 'சென்னை 600028 II' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படம் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பின்படி இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரித்த இந்த படத்தில் ஜெய, சிவா, விஜயலட்சுமி உள்பட கிட்டத்தட்ட முதல் பாகத்தில் நடித்த அனைவருமே நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக யுவன்ஷங்கர் ராஜா, பவதாரிணி, வாசுகி பாஸ்கர் பாடிய 'த பாய்ஸ் ஆர் ராக்' பாடல் இளைஞர்களின் ரிங்டோனாக உள்ளது.
இந்த படத்தில் நடிகை மனிஷா யாதவி, 'சொப்பனசுந்தரி' என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேஷ் யாதவ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு, ப்ரவீண் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

நயன்தாராவை புண்படுத்தும் நோக்கம் இல்லை. விவேக் விளக்கம்

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காஷ்மோரா' திரைப்படம்...

'பாகுபலி' சிவகாமி கேரக்டரில் ஏன் நடிக்கவில்லை. பிரபல நடிகை பேட்டி

எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி' கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது...

தனுஷூடன் நடித்த அனுபவம். 'கொடி' படம் குறித்து த்ரிஷா பேட்டி

தனுஷ், த்ரிஷா நடிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கிய 'கொடி' திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாகவுள்ள...

ஆர்யாவுக்காக இணையும் சூர்யா-கார்த்தி-விஷால்

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஆர்யா, திறமையான நடிகராக இருந்தபோதிலும் கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை...

அனிருத்தின் அடுத்த ஆல்பம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் தற்போது கோலிவுட்டின் பிசியான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில்...