close
Choose your channels

'சென்னை 600028 II'ரிலீஸ் தேதி. வெங்கட்பிரபு அறிவிப்பு

Thursday, October 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகமான 'சென்னை 600028 II' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படம் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பின்படி இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரித்த இந்த படத்தில் ஜெய, சிவா, விஜயலட்சுமி உள்பட கிட்டத்தட்ட முதல் பாகத்தில் நடித்த அனைவருமே நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக யுவன்ஷங்கர் ராஜா, பவதாரிணி, வாசுகி பாஸ்கர் பாடிய 'த பாய்ஸ் ஆர் ராக்' பாடல் இளைஞர்களின் ரிங்டோனாக உள்ளது.
இந்த படத்தில் நடிகை மனிஷா யாதவி, 'சொப்பனசுந்தரி' என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேஷ் யாதவ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு, ப்ரவீண் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment