close
Choose your channels

சிம்புவின் திருமணத்திற்கு பின்னர் தான் என்னுடைய திருமணம்: பிரபல நடிகர்

Thursday, September 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவின் திருமணத்திற்கு பின்னர்தான் தனது திருமணம் என பிரபல நடிகர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் நடிகர் ஜெய் என்பது தெரிந்ததே. இவர் விஜய் நடித்த ’பகவதி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, அதன் பின்னர் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நேற்று சென்னை திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் விழா ஒன்றின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெய் ’சிம்புவுக்கு திருமணமான பின்னர்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அனேகமாக சிம்புவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடந்துவிடும் என்று நினைக்கின்றேன் என்றும் கூறினார்.

மேலும் விஜய் அவர்களுடன் இணைந்து ’பகவதி’ என்ற திரைப்படத்தில் நடித்தேன். அதன் பின்னர் அவரது திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க பல தடவை முயற்சி செய்தேன். ஆனால் அவரோ நீதான் ஹீரோ ஆகிவிட்டாயே, இனிமேல் என்ன? என கூறி தனது படத்தில் வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார் என்று நகைச்சுவையாக கூறினார்.

நடிகர் ஜெய் தற்போது பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவசிவா, குற்றமே குற்றம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment