close
Choose your channels

ஜெய்யின் 'புகழ்' ரிலீஸ் தேதி

Saturday, February 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான ஒரே படமான 'வலியவன்' பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ஜெய் தற்போது முழுமையாக நம்பியிருப்பது 'புகழ்' படத்தைதான் என்று கூறப்படும் நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என கூறப்பட்டது.


இந்நிலையில் தற்போது 'புகழ்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த திரைப்படம் வரும் மார்ச் மாதம் 18ஆம் தேதி வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

ஜெய, சுரபி, கருணாஸ், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மணிமாறன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே உதயம் என்.எச்.4 மற்றும் பொறியாளன் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், வெங்கடேஷ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். பிரபல தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் வருண்மணியன் தயாரித்துள்ள இந்த படம் ஜெய்க்கு பிரேக் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment