ஜெய்யின் 'புகழ்' : ஒரு முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'பகவதி' படத்தில் அவருடைய தம்பியாக கோலிவுட்டில் அறிமுகமான நடிகர் ஜெய், அதன்பின்னர் சென்னை 600028, சுப்பிரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அவருடைய சமீபத்தில் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை எனினும் கோலிவுட்டில் தனது பழைய மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க அவர் நம்பிக்கொண்டிருக்கும் படமான 'புகழ்' திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது.
அதேபோல் இயக்குனர் சரவணனின் 'இவன் வேற மாதிரி' படத்தில் அறிமுகமான நடிகை சுரபிக்கும் இந்த படம் ஒரு முக்கியமான படம்.
தேர்தல் நேரத்தில் வெளிவரும் அரசியல் படம் என்பதாலும், இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாலும் ஜெய்யின் மற்றொரு வெற்றிப்படமாக இந்த படம் மாற வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. விவேக்-மெர்வின் இசையில் அனைத்து பாடல்களுக்கும் குறிப்பாக அனிருத் பாடிய 'நாங்க பொடியன்' பாடலுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதும் இந்த படத்திற்கு கிடைத்த ப்ளஸ் ஆகும்
இந்த படத்தின் இயக்குனர் மணிமாறன் 'உதயம் என்.எச்.4' என்ற விறுவிறுப்பான படத்தை இயக்கியவர் என்பதால் இந்த படத்தையும் விறுவிறுப்பாக கொடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருண்மணியன் தயாரிப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை நாளைய திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments