நடிகை அஞ்சலியுடன் திருமணமா? மனம் திறந்த ஜெய்

  • IndiaGlitz, [Thursday,December 19 2019]

தமிழ் திரையுலகில் இளையதலைமுறை கதாநாயகர்களில் ஒருவரான ஜெய், நடிகை அஞ்சலியை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெய் இதுகுறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.

எனக்கும் அஞ்சலிக்கும் காதல் என்றும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில் உண்மையில்லை என்றும், அஞ்சலியுடன் காதலோ அல்லது அவரை திருமணம் செய்யும் எண்ணமும் இல்லை என்றும் தன்னுடைய திருமணம் வெளிப்படையாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து ஜெய்-அஞ்சலி காதல் இல்லை என்பது உறுதியாகின்றது 

 

சமீபத்தில் ஜெய் நடிப்பில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக ஒரு அதிரடி சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்காக அவர் தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ’எண்ணித்துணிக’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது