ஜெய் படத்தில் இணையும் ஜிமிக்கி கம்மல்

  • IndiaGlitz, [Wednesday,January 24 2018]

ஜெய் நடிப்பில் சமீபத்தில் 'பலூன்' திரைப்படம் வெளியான நிலையில் தற்போது அவர் வெங்கட்பிரபு இயக்கி வரும் 'பார்ட்டி' படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'கலகலப்பு 2 திரைப்படம் வரும் பிப்ரவரியில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஜெய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள புதிய படத்திற்கு 'மாங்கல்யம் தந்துனானே' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷியாம் மற்றும் பிரவீன் இயக்கவுள்ளனர். ஜெய் ஜோடியாக 'குரங்கு பொம்மை' படத்தில் நடித்த டெல்னா டேவிஸ் நடிக்கவுள்ளார். இன்னொரு நாயகி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் இந்த படத்தில் இசையமைக்க ஷான் ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் இணையதளத்தை கலக்கிய 'ஜிமிக்கி கம்மல்' பாடலை கம்போஸ் செய்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி காலமானார்.

பழம்பெரும் தென்னிந்திய நடிகையும், நடிகை செளகார் ஜானகியின் சகோதரியுமான கிருஷ்ணகுமாரி இன்று பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 85

இது வைரமுத்து திருப்பி அடிக்கும் நேரமா?

கவிஞர் வைரமுத்துவுக்கு சோதனையான நாட்கள் என்றே சொல்லலாம். இராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக அவர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது

கமல் கட்சிக்கு ஆதரவு கொடுத்த பிரபல தயாரிப்பாளர்-நடிகர்

கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நிலையில் அவருடைய கட்சியில் சேரவும், இராமநாதபுரத்தில் நடைபெறும் முதல் மாநாட்டில் பங்குபெறவும் பல கோலிவுட் திரையுலகினர் முன்வந்துள்ளனர்

God Sex and Truth படத்தை எந்த இணையதளத்தில் பார்க்கலாம்: ராம்கோபால் வர்மா தகவல்

இயக்குனர் ராம்கோபால்வர்மா இயக்கத்தில் உருவான வெப் திரைப்படம் God Sex and Truth. இந்த படத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மால்கோவா நடித்துள்ளார்.

நாகரீக அரசியலை நோக்கி கமல்-ரஜினி

திராவிட இயக்கங்களை அடுத்து கமல், ரஜினி கட்சிகளின் ஆதிக்கம் தமிழகத்தில் மேலோங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.