ஜெய் பட நடிகைக்கு ஆண் குழந்தை.. என்ன பெயர் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஜெய் நடித்த திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் இது குறித்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதோடு, குழந்தையின் பெயரையும் அறிவித்துள்ளார்.
ஜெய் நடித்த ’தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை யாமி கௌதம். இவர் ஏற்கனவே பிரகாஷ்ராஜ் நடித்த ’கௌரவம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அது மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் அவர் நடித்துள்ளார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை யாமி கௌதம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆதித்யா என்பவரை திருமணம் செய்த நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு அவர் வேதாவித் என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஒரு பெற்றோராக நாங்கள் அழகான பயணத்தை தொடங்கி உள்ளோம், எங்கள் மகனின் பிரகாசமான எதிர்காலத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம், மகனின் ஒவ்வொரு மைல் கல்லில் எங்கள் அன்பான பங்களிப்பு இருக்கும். தேசத்தின் பெருமை மிகுந்த ஒரு கலங்கரை விளக்கமாக அவர் திகழ்வார் என்ற நம்பிக்கையுடன் மனது நிறைந்திருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments