அட்லியின் அடுத்த படத்தில் வில்லனாகும் தமிழ் ஹீரோ?

  • IndiaGlitz, [Thursday,June 10 2021]

அட்லியின் அடுத்த படத்தில் தமிழ் ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் அட்லி, ‘ராஜாராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன்பின் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார் என்பதும், தற்போது அவர் ஷாருக்கான் படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அட்லி. ஏற்கனவே ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ ’அந்தகாரம்’ போன்ற படங்களை தயாரித்த இயக்குனர் அட்லி தயாரிக்கும் அடுத்த படத்தில் தமிழ் திரையுலகின் ஹீரோக்களில் ஒருவரான ஜெய் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தை அவருடைய உதவி இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் நாயகன் ஒரு புதுமுகம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் திரை உலகில் அரவிந்தசமை, விஜய் சேதுபதி உள்ள உள்பட பலர் வில்லனாக நடித்து வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் தற்போது ஜெய் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.