'ஜருகண்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு: பிக்பாஸ் டேனியலுக்கு திருப்பம் ஏற்படுமா?

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜருகண்டி' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஜருகண்டி' திரைப்படம் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான நிதின் ச்த்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே இந்த படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் பாடகராக நடித்துள்ள இந்த படத்தில் ரெபா மோனிகா, அமித் திவாரி, ரோபோ சங்கர், இளவரசு, ஜிஎம் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் டேனியல் ஒரு முக்கிய கேரகடரில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு புதிய திருப்பத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாபு சஷி இசையில் ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரவீன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

விஷால் பாணியில் களத்தில் இறங்கிய வரலட்சுமி

கமல் பாணியில் விஷாலும் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பதும், அந்த நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இன்றுமுதல் ஒளிபரப்பாகவுள்ளது என்பதும் தெரிந்ததே

விஜய்சேதுபதிக்காக விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கை

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' ரிலீசின்போது இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் விஷாலுக்கும் இடையே பைனான்ஸ் பிரச்சனை ஏற்பட்டதாகவும்,

விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்: காவல்துறையில் புகார் செய்ய காமெடி நடிகர் முடிவு

கடந்த இரண்டு நாட்களாக காமெடி நடிகர் கருணாகரனுக்கு விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்து வருவது தெரிந்ததே

இது காலங்காலமாக நடக்கும் பிரச்சனை: '96' பிரச்சனை குறித்து விஜய்சேதுபதி

சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதியின் '96' திரைப்படம் ஒருசில பைனான்ஸ் பிரச்சனையால் அதிகாலை காட்சி ரத்தானது.

சூர்யா படத்தில் பிரதமராக நடிக்கும் பிரபல நடிகர்?

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரதமராக ஒரு பிரபல நடிகர் நடித்திருக்கும் செய்திவெளிவந்துள்ளது.