தமிழ்நாடே அலர்ற மாதிரி ஒரு சம்பவத்தை பண்ணப்போறேன்: ஜெய்யின் 'எண்ணித்துணிக' டிரைலர்

  • IndiaGlitz, [Sunday,July 24 2022]

நடிகர் ஜெய் நடித்த ’எண்ணித்துணிக’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்டு 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

’தமிழ்நாடே அலர்ற மாதிரி ஒரு சம்பவத்தை பண்ணப்போறேன்’ என்ற வசனத்துடன் ஆரம்பிக்கும் இந்த டிரைலரில் வில்லனுக்கு சவாலாகவும் சிம்ம சொப்பனமாகவும் இருக்கும் ஜெய் கேரக்டர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் தான் இந்த படத்தின் கதை என்று டிரைலரில் இருந்து தெரியவருகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கும் ஜெய்க்கு இந்த படம் நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெய், அதுல்யா ரவி, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், ஜி மாரிமுத்து உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை வெற்றிச்செல்வன் என்பவர் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் தினேஷ்குமார் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.