இன்று ஜெய்-அஞ்சலியின் முதல்நாள்

  • IndiaGlitz, [Saturday,July 09 2016]

ஜெய், அஞ்சலி நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் இதே ஜோடி ஒரு படத்தில் இணைந்துள்ளது என்பதையும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக செய்திகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை அஞ்சலி மற்றும் ஜெய் இருவருமே தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
ஐந்து வருடங்கள் கழித்து ஜெய்யுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக அஞ்சலி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படம் ஜெய்க்கு 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மணிரத்னம்-கார்த்தி படத்தில் இணைந்த மேலும் ஒரு முக்கிய நடிகை

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'காற்று வெளியிடை" படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மூன்றாவது முறையும் அஜித்துக்கு 'V'ஐ கொடுப்பாரா சிவா?

அஜித் நடிக்கவுள்ள 'தல 57' படத்தின் பூஜை மிக எளிமையாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் சிறுத்தை சிவா அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வருகிறார்.

ஜி.வி.பிரகாஷ்: முதலில் இசையமைப்பாளர், பின்னர் நடிகர் தற்போது இயக்குனர்?

கோலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ், 'டார்லிங்' படத்தின் மூலம் நடிகரானார்.

அஜித்துடன் முதல்முறையாக இணையும் பிரபல நடிகை

அஜித்தின் அடுத்த படமான 'தல 57' படத்தின் பூஜை எளிய முறையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

சூப்பர் ஸ்டார் 'கபாலி'யும் புரமோஷன் சூப்பர் ஸ்டார் தாணுவும். ஒரு பார்வை

சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் என்றால் விளம்பரமே தேவையில்லை. ரஜினி நடிக்கின்றார் என்ற தகவலே மிகப்பெரிய புரமோஷனாக இருந்து வரும் நிலையில் 'கபாலி' படத்தின் தயாரிப்பாளர் செய்யும் பிரமாண்டமான புரமோஷன்கள் இந்த படத்தை உலக அளவில் பேச வைத்துவிட்டது.