ஜெய்-அஞ்சலி படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,July 10 2016]

நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி ஐந்து வருடங்களுக்கு பின்னர் இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது என்றும் ஜெய், அஞ்சலி இருவருமே தங்கள் சமூக வலைத்தளங்களில் இதை உறுதிப்படுத்தியிருந்தனர் என்பதையும் சற்று முன்னர் பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
திகில் மற்றும் சஸ்பென்ஸ் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு 'பலூன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் சற்று முன்னர் முதல் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் சினேஷ் இயக்கும் இந்த படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவும், திலிப் சுப்பராயன் சண்டைப்பயிற்சியும் ஷக்தி வெங்கட்ராஜ் கலை இயக்குனராகவும் ரூபன் எடிட்டராகவும் பணிபுரிகின்றனர். இந்த படம் ஜெய்யின் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் 60: இளையதளபதிக்கு எத்தனை வேடம்?

இளையதளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கி வரும் 'விஜய் 60' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது...

விஜய் 60 : இளையதளபதிக்கு எத்தனை வேடம்?

இளையதளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கி வரும் 'விஜய் 60' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. கீர்த்தி சுரேஷ்...

கவுதம் மேனனின் அடுத்த பட ரிலீஸ் தேதி

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின்னர் வேறு படங்கள் ரிலீஸ் ஆகவில்லை...

உலகின் கவனத்தை ஒரே நாளில் திருப்பும் கபாலி-பாகுபலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படத்தின் சென்சார் அனேகமாக வரும் திங்கட்கிழமை இருக்கலாம் என்றும் அதன்பின்னர் ஜூலை 22 என்று திட்டமிடப்பட்டுள்ள ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இன்று ஜெய்-அஞ்சலியின் முதல்நாள்

ஜெய், அஞ்சலி நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியும் பரபரப்பாக பேசப்பட்டது.