ஓவியாவுக்கு மரியாதை செலுத்திய ஜெய்-அஞ்சலி குழுவினர்

  • IndiaGlitz, [Thursday,July 20 2017]

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கள்ளங்கபடம் இல்லாமல் இருக்கும் ஒரே பங்கேற்பாளர் 'களவாணி' ஓவியாதான் என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது. ஒவ்வொரு முறையும் மற்ற பங்கேற்பாளர்கள் ஓவியாவை வெளியேற்ற தேர்வு செய்தாலும் ஆன்லைன் நேயர்களின் அபாரமான ஆதரவுடன் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓவியா, கஞ்சாகருப்புவை 'ஷட்டப் பண்ணுங்க' என்று கூறினார். இந்த புதுமையான(!) வார்த்தை நேயர்களை மட்டுமின்றி திரையுலகினர்களையும் கவர்ந்துவிட்டதுபோலும்
ஆம், ஜெய், அஞ்சலி நடித்துள்ள 'பலூன்' படத்தில் 'ஷட்டப் பண்ணுங்க' என்று தொடங்கும் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடலை ஓவியாவுக்கு சமர்ப்பிப்பதாக 'பலூன்' பட இயக்குனர் ஷினிஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

More News

தனுஷின் 'விஐபி 2' ரிலீஸில் திடீர் மாற்றமா?

தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து சென்சாருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது...

ஜூலிக்கு என்ன ஆச்சு டிராமாவா? சீரியஸா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் பெரிதான சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த நிலையில் இறுதியில் திடீரென ஜூலி வயிற்றை பிடித்து கொண்டு கதறி அழுவதை போல் முடித்துள்ளனர்...

தமிழகத்தின் வெற்றிடத்தை நிரப்புவாரா கமல்ஹாசன்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் முதுமை ஆகியவைகளால் தமிழகம் ஒரு முதுகெலும்பில்லாத தலைவர் இல்லாத மாநிலமாக காணப்படுவதாக அரசியல் விமர்சகர்களும் ஊடகங்களும் கூறி வருகின்றன.

10 படத்துல நடிச்சிட்டு முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதா? டாக்டர் கிருஷ்ணசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று ஒருசில கட்சிகள் கனவு கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு இடியாய் இறங்கிய செய்தி தான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்த செய்திகள்...

ஒரே மேடையில் கமல்-ரஜினி! மீண்டும் ஒரு ஆகஸ்ட் புரட்சி?

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி வெள்ளையனை வெளியேற்றுவதற்காக தேசப்பிதா மகாத்மா காந்தி நடத்திய போராட்டம் தான் ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படுகிறது