ஜெய்-அஞ்சலியின் 'பலூன்' டிராக் லிஸ்ட் வெளியீடு

  • IndiaGlitz, [Saturday,December 02 2017]

'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ள ஜெய்-அஞ்சலி ஜோடி நடித்துள்ள பலூன் திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் டிராக்லிஸ்ட் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஆல்பத்தில் நான்கு பாடல்களும் இரண்டு தீம் பாடல்களும் உள்ளன.

1. வானம் தானே' என்று தொடங்கும் முதல் பாடலை அருண்காமராஜா எழுந்த ரிஸ்வான் பாடியுள்ளார்.

2. மழைமேகம் என்று தொடங்கும் இரண்டாவது பாடலை யுவன்ஷங்கர் ராஜா , பிரியா ஜெர்சன் ஆகியோர் பாட இந்த பாடலையும் அருண்காமராஜ்  எழுதியுள்ளார்.

3. உயிரிலே உயிரிலே என்ற தொடங்கும் அடுத்த பாடலை விஜய்ஜேசுதாஸ், பிரியங்கா ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலையும் அருண்காமராஜ் எழுதியுள்ளார்./

4. பிக்பாஸ் புகழ் ஓவியாவின் வசனமான 'ஷட்டப் பண்ணுங்க' என்று தொடங்கும் இந்த பாடலையும் அருண்காமராஜ் எழுதி இளம் இசைப்புயல் அனிருத்துடன் பாடியுள்ளார். ஏற்கனவே இந்த பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் 'தி பலூன் மிஸ்ட்ரி மற்றும் ரிவஞ்ச் ஆப் தி ஜோக்கர் ஆகிய இரண்டு தீம் பாடல்களும் இந்த படத்தின் ஆல்பத்தில் உள்ளது

More News

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரிலீசுக்கு தயாராகிறது 'களவாடிய பொழுதுகள்

தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா நடித்த களவாடிய பொழுதுகள்' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த படம் வெளியாகாமல்

ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் போட்டி உறுதி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடவுள்ளதாக நேற்று செய்திகள் பரவின.

நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய்சேதுபதி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது மீண்டும்

இவாங்கா டிரம்புக்கு ஆதார் அட்டை? பொறுப்புடன் பதில் அளித்த UIDAI அலுவலகம்

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இவாங்காவின்

அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம்: சென்னை தப்பிக்குமா?

கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.