ஜெய்-அஞ்சலியின் 'பலூன்' டிராக் லிஸ்ட் வெளியீடு
Send us your feedback to audioarticles@vaarta.com
'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ள ஜெய்-அஞ்சலி ஜோடி நடித்துள்ள பலூன் திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் டிராக்லிஸ்ட் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஆல்பத்தில் நான்கு பாடல்களும் இரண்டு தீம் பாடல்களும் உள்ளன.
1. வானம் தானே' என்று தொடங்கும் முதல் பாடலை அருண்காமராஜா எழுந்த ரிஸ்வான் பாடியுள்ளார்.
2. மழைமேகம் என்று தொடங்கும் இரண்டாவது பாடலை யுவன்ஷங்கர் ராஜா , பிரியா ஜெர்சன் ஆகியோர் பாட இந்த பாடலையும் அருண்காமராஜ் எழுதியுள்ளார்.
3. உயிரிலே உயிரிலே என்ற தொடங்கும் அடுத்த பாடலை விஜய்ஜேசுதாஸ், பிரியங்கா ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலையும் அருண்காமராஜ் எழுதியுள்ளார்./
4. பிக்பாஸ் புகழ் ஓவியாவின் வசனமான 'ஷட்டப் பண்ணுங்க' என்று தொடங்கும் இந்த பாடலையும் அருண்காமராஜ் எழுதி இளம் இசைப்புயல் அனிருத்துடன் பாடியுள்ளார். ஏற்கனவே இந்த பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் 'தி பலூன் மிஸ்ட்ரி மற்றும் ரிவஞ்ச் ஆப் தி ஜோக்கர் ஆகிய இரண்டு தீம் பாடல்களும் இந்த படத்தின் ஆல்பத்தில் உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com