அஞ்சலி பிறந்த நாளை மறந்த ஜெய்! என்ன ஆச்சு பலவருட காதல்?

  • IndiaGlitz, [Wednesday,June 20 2018]

'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்தபோது ஜெய் மீது அஞ்சலிக்கு காதல் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் இருவரும் காதல் பறவைகளாக சுற்றி வந்ததும் அறிந்ததே. ஜெய், அஞ்சலி இருவரும் ஒருவருடைய பிறந்த நாளுக்கு இன்னொருவர் வாழ்த்து சொல்வது கடந்த சில ஆண்டுகளாக இருந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு அஞ்சலி பிறந்த நாளின்போது ஜெய் எழுதிய கவிதை இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அஞ்சலியின் பிறந்த நாள் வந்தபோது ஜெய் ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. எனவே இருவரின் காதலில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெய், அஞ்சலி இணைந்து நடித்த 'பலூன்' படமும் இருவரும் தனித்தனியாக நடித்த படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இருவரும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தவுள்ளதாகவும், அதுவரை காதலை ஒத்திபோட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெய் தற்போது 'ஜருகண்டி' படத்திலும் அஞ்சலி தற்போது மூன்று திகில் படங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். சினிமாவில் ஒருசில வெற்றி படங்கள் கொடுத்த பின்னர் மீண்டும் இந்த ஜோடி இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்