வாழ்க்கையை திரைப்படம் போல நினைத்தீர்களா? நடிகர் ஜெய்க்கு நீதிபதி சரமாரி கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகாததை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நடிகர் சதீஷ் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இன்றைய விசாரணையில் நடிகர் ஜெய்யிடம் நீதிபதி சரமாரியாக கேள்விகள் கேட்டு துளைத்ததாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக வாழ்க்கையையும் திரைப்படம் போல நினைத்தீர்களா என ஜெய்யிடம் நீதிபதி கண்டிப்புடன் கேட்டதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி ஜெய் கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்கு போலீஸ் வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்று காவல்துறையினர்களிடமும் நீதிபதி கண்டிப்பு காட்டியுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்தகட்ட விசாரணை தேதி அல்லது தீர்ப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments