ஷாருக்கானுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: பேசிய பிரபலம் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
காவி நிறத்தை களங்கப்படுத்தும் ஷாருக்கானுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் அவரை நேரில் பார்த்தால் எரித்துக் கொன்று விடுவேன் என்றும் பிரபலம் ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷாருக்கான் மற்றும் தீபிகா நடித்த ‘பதான்’ திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் தீபிகா படுகோன் காவி நிறத்தில் சர்ச்சைக்குரிய வகையில் உடை அணிந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பாஜக உள்பட பல அரசியல் கட்சிகள் இப்படத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் அயோத்தியை சேர்ந்த ஜகத்குரு பரமாச்சாரியார் என்பவர் ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிரோடு எரித்துக் கொன்று விடுவேன் என்றும் காவி நிறத்தை கலங்கப்படுத்தும் இதுபோன்ற புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். காவியை களங்கப்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் ஷாருக்கானுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை திரையரங்குகளை கொளுத்துவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com