ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படத்தில் ரஜினி-விஜய் வில்லன்

  • IndiaGlitz, [Saturday,July 02 2016]

ஜூராஸிக் பார்க்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ள 'The BFG' என்ற திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 15ஆம் தேதி மிகப்பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது.
இந்தியாவிலும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் பிரபல வில்லன் நடிகர் ஜெகபதி பாபு முக்கிய கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார். இவர் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா', விஜய் நடித்து வரும் 'விஜய் 60' ஆகிய படங்கள் உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம்போல் கிராபிக்ஸ் காட்சிகள் ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ள 'The BFG' படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.