தனுஷ் படத்தின் அனைத்து பணிகளும் நிறுத்திவைப்பு: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு 

  • IndiaGlitz, [Wednesday,March 18 2020]

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து கடந்த சில நாட்களாக இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைப்பக்கத்தில் ’ஜகமே தந்திரம்’படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் லண்டனில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாகவும் மார்ச் இறுதியில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கும் என்றும் மே 1ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் அறிவித்து இருந்தது

இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக கொரோனா வைரஸ் காரணமாக ’ஜகமே தந்திரம்’ படத்தின் அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் குறித்த நிலைமை சீரான பின்னரே இந்த படத்தின் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தப் படம் மே 1ஆம் தேதி திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இது யாரு பார்த்த வேலைன்னு தெரியலை: 'தளபதி 65' குறித்து பிரபல இயக்குனர்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு; வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்ட 2,635 பேர்!!!

மிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 2,635 பேரை அவர்களது வீடுகளில் தனிமைப் படுத்தி வைத்து இருப்பதாகத் தமிழக சுகாதாரத் துறை இயக்குனரகம் தெரிவித்து

இந்தியாவில் முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை பார்த்த மருத்துவருக்கு கொரோனா..!

76 வயதான முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளின் நிலைமை என்ன??? தொடரும் சந்தேகங்களுக்கு விளக்கம்

கடந்த சில தினங்களாக ATM மெஷின்களில் 2000 ரூபாய் நோட்டுகளை உள்ளீடு செய்ய முடியாமல் பலர் தவிர்த்து வந்தனர்