close
Choose your channels

தனுஷின் 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்த தகவல்

Tuesday, March 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அசுரன், பட்டாஸ் ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து தனுஷ் தற்போது ’ஜகமே தந்திரம்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார். இந்த இரண்டு படங்களின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்து இந்த இரண்டு படங்களும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் தனது சமூக வலைப்பக்கத்தில் ’ஜகமே தந்திரம்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு கைகளிலும் துப்பாக்கியால் சரமாரியாக சுடும் இந்த போஸ்டரில் இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் இந்த படம் ரிலீஸாக அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டர் தற்போது தனுஷ் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment