நான் கேட்டேன், உடனே கொடுத்துட்டார்.. ஜாபருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த கிஃப்ட்..!

  • IndiaGlitz, [Wednesday,August 23 2023]

’ஜெயிலர்’ படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த கிஃப்ட் குறித்த தகவலை நடிகர் ஜாபர் சதீக் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர்கள் கூட ரசிகர்கள் பார்வையில் கவனம் பெற்றார்கள் என்பதும் அந்த வகையில் சில நிமிடங்களே வந்தாலும் ஜாபர் சாதிக் கேரக்டர் சூப்பராக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது இந்த படத்திற்காக சூப்பர் ஸ்டார் பயன்படுத்திய கூலிங் கிளாஸ் கண்ணாடியை தான் கேட்டதாகவும் உடனே அந்த கண்ணாடியை தனக்கு பரிசாக சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்ததாகவும் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.

நான் கேட்டேன், உடனே அவர் கொடுத்துவிட்டார், அவருக்கு எனது நன்றி என்று கூறி அந்த கண்ணாடியின் புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் ஜாபர் சாதிக் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

நாளை வெளியாகும் படத்தில் துருவ் விக்ரம் கேமியோவா? ரோலக்ஸ் மாதிரி மாஸ் இருக்குமா?

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாளை வெளியாகியுள்ள மாஸ் ஆக்சன் திரைப்படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருப்பதாகவும் அந்த கேரக்டர் ரோலக்ஸ் கேரக்டருக்கு இணையாக இருக்கும் என்றும் கூறப்படுவது

பிரக்ஞானந்தாவின் தாய்க்கு வாழ்த்து தெரிவித்த செஸ் வீராங்கனை.. நெகிழ்ச்சியான பதிவு..!

 கடந்த சில நாட்களாக உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த  பிரக்ஞானந்தா

ரஜினி-கமல் இணையும் படம்.. அஜித், ஷாருக்கான் கேமியோ.. தகவல் சொன்ன இயக்குனர் யார் தெரியுமா?

கடந்த 40 ஆண்டுகளாக ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து நடிக்காத நிலையில் விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்கள் என்று தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி

'சில்லுன்னு ஒரு காதல்' படத்தில் பார்த்த மாதிரி இருக்காரே.. பூமிகாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்..!

சூர்யா நடித்த 'சில்லுன்னு ஒரு காதல்' உள்பட பல படங்களில் நடித்த நடிகை பூமிகா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்

கதாநாயகியாகும் 18 வயது வனிதா மகள்.. முதல் பட ஹீரோ யார்?

நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா சமீபத்தில் தனது 18 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவர் விரைவில் திரைப்படத்தில் நாயகி ஆக அறிமுகமாக இருப்பதாக வனிதா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.