பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜா: உலககோப்பைக்காக வாழ்த்திய மோடி
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று உலகக்கோப்பை கி்ரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் ஒருவர் ஜடேஜா. இந்த நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டபின் ஜடேஜா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தான் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பதிவு செய்திருந்தார்
இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, உலகக்கோப்பையில் அணியில் இடம்பெற்றதற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார். ஆமா; பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜாவுக்கு அவரது குடும்பத்தில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் தான் ஜடேஜாவின் தந்தை அனிருதுசிங் மற்றும் சகோதரி நைனாபா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபக்கம் தந்தையும் சகோதரியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்க, இன்னொரு பக்கம் ஜடேஜாவின் மனைவி பாஜகவில் இணைந்ததோடு, தற்போது ஜடேஜாவும் தனது முழு ஆதரவை பாஜகவுக்கு அளித்துள்ளார். ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் இரண்டு தேசிய கட்சியில் இருப்பதால், இரண்டு கட்சிகளில் எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் ஜடேஜா குடும்பத்திற்கு சாதகம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது
Thank you @imjadeja!
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 16, 2019
And, congratulations on being selected for the Indian cricket team for the 2019 World Cup. My best wishes. https://t.co/wLbssqSoTB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments