பிக்பாஸ் செல்லும் மேலும் ஒரு விஜய் டிவி தொகுப்பாளினி?

  • IndiaGlitz, [Saturday,September 25 2021]

விஜய் டிவியில் அக்டோபர் 3ஆம் தேதி முதல் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் நடிகர் இமான் அண்ணாச்சி, ஷகிலா மகள் மிளா, தொகுப்பாளினி பிரியங்கா, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, ஆர்ஜே வினோத், குக் வித் கோமாளி சுனிதா, பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ரேணுகா பிரவீன், நடிகை ப்ரியா ராமன், மலேசியாவை சேர்ந்த நதியா சங் உள்பட ஒருசிலர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொள்கின்ற நிலையில் தற்போது மேலும் ஒரு தொகுப்பாளினி கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அவர்தான் ’கலக்கப்போவது யாரு’ உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்லின் என்று கூறப்படுகிறது. இந்தமுறை போட்டியாளர்கள் தேர்வு கச்சிதமாக இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.